இந்துக்களின் நம்பிக்கையை ராகுல் காந்தி இழிவுபடுத்துவதாக பாஜக கடும் கண்டனம்
March 11, 2026

சமீபத்திய கருத்தரங்கில் தரவுகள் மற்றும் புத்தாக்கம் குறித்து பேசிய ராகுல் காந்தி, கோமியம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். இந்த பேச்சு இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுலின் இத்தகைய சொற்கள் மத அடிப்படைவாதிகள் இந்துக்களை கேலி செய்ய பயன்படுத்துபவை என்று மால்வியா குற்றம் சாட்டினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரே இவ்வாறு பேசியது அவரது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.