சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் உணவு விநியோகம் முடங்கும் அபாயம்
March 11, 2026

நாடு முழுவதும் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போர் சூழலால் எல்பிஜி வரத்து குறைந்துள்ள நிலையில், இதற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்த ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. இதனால் சமைத்த உணவுகளுக்குப் பதில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான தொகையைத் திரும்ப வழங்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தற்காலிகமாக ரயில்களில் உணவு வழங்கும் சேவையை நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.