நடுநிசியில் தவித்த இளம்பெண் ராணுவ வீரரின் மனிதாபிமான உதவி

நடுநிசியில் தவித்த இளம்பெண் ராணுவ வீரரின் மனிதாபிமான உதவி

மதுரா இரயில் நிலையத்தில் நள்ளிரவில் மொபைல் சார்ஜ் தீர்ந்து போனதால், டெல்லி செல்லவிருந்த ரூப் என்ற இளம்பெண் செய்வதறியாது தவித்தார். பெற்றோரைத் தொடர்பு கொள்ள அங்கிருந்த கடைக்காரர்களிடம் உதவி கேட்டும் யாரும் முன்வராத நிலையில், அங்கு வந்த இரயிலில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உடனடியாக உதவினார்.

சற்றும் யோசிக்காமல் தனது பவர் பேங்க்கை அந்தப் பெண்ணிடம் கொடுத்து உதவிய அந்த வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான சூழலில் யாரும் உதவாத போது, இந்திய ராணுவம் தனக்குத் துணையாக நின்றதை அந்தப் பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *