தரையிறங்கும் போது கழன்ற முன்பக்க சக்கரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது

தரையிறங்கும் போது கழன்ற முன்பக்க சக்கரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் ஃபூகெட் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், ஃபூகெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத விபத்தை சந்தித்தது. தரையிறங்கிய வேளையில் விமானத்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால் ஓடுதளத்திலேயே விமானம் சிக்கிக் கொண்டது.

இந்த விபத்தின் காரணமாக ஃபூகெட் விமான நிலையச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தற்போது ஓடுதளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *