சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
March 11, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு ‘பிளான் பி’ திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்தார் மற்றும் சவுதி அரேபியாவை மட்டும் நம்பியிருக்காமல், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. மாற்று நாடுகளின் ஒத்துழைப்பால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி, விநியோகம் விரைவில் சீராகும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.