புக்கெட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்து தரை இறங்கும்போது டயர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

புக்கெட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்து தரை இறங்கும்போது டயர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், புக்கெட்டில் தரை இறங்கியபோது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன் சக்கரம் கழன்று ஓடுதளத்திலேயே சிக்கிக்கொண்டது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் புக்கெட் விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஓடுதளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *