100 நாள் வேலை திட்டத்தை முடக்க மோடி அரசு சதி, அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் கண்டனம்

100 நாள் வேலை திட்டத்தை முடக்க மோடி அரசு சதி, அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் கண்டனம்

மத்திய பாஜக அரசு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்ட முயற்சிப்பதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, ‘விபி-கிராம் ஜி’ என்ற புதிய சட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் வேலை உரிமையைப் பறிக்க மோடி அரசு வஞ்சனை செய்வதாக அவர் சாடினார். இதன் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணை போவதாக அமைச்சர் விமர்சித்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் இந்த துரோகத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கிராமப்புற பொருளாதாரத்தை சிதைக்கும் இத்திட்ட மாற்றங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *