தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த 3 முதல் 5 நாட்களில் வெளியாக வாய்ப்பு
March 11, 2026

தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் இறுதியில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முக்கிய முடிவால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கான கட்டங்கள் குறித்த அறிவிப்பும் இதனுடன் வெளியாகும் என்பதால், அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.