மக்களின் தலையில் சிலிண்டர் விலை உயர்வு சுமை மார்ச் 14ல் தமிழகம் தழுவிய பிரம்மாண்ட போராட்டம்

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதைக் கண்டித்து, வரும் மார்ச் 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில், சர்வதேச அரசியல் நெருக்கடிகளை காரணம் காட்டி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிலிண்டர் முன்பதிவுக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விலை ஏற்றம் சாமானிய குடும்பங்களை விறகு அடுப்பிற்கு தள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை உறுதிப்படுத்தவும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்குமாறு அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.