காஞ்சிபுரத்தில் கள்ளக்காதல் விபரீதம் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

காஞ்சிபுரத்தில் கள்ளக்காதல் விபரீதம் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

காஞ்சிபுரம் ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், நான்கு குழந்தைகளை விடுத்து 27 வயது வசந்த் என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது உறவு எல்லை மீறிய நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதி சென்னை கொளத்தூரில் தங்கியிருந்தபோது மோதல் வெடித்தது. வசந்தை குடும்பத்தை விட்டு வருமாறு அந்த பெண் வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த வசந்த், அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய வசந்தைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *