தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா விஜய்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. திருச்சியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுகவின் ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைப்பதே தங்களின் இலக்கு என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய அமைச்சர் எல். முருகன் இது குறித்து சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த புதிய கூட்டணி மாற்றம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *