கரை ஒதுங்கிய அபூர்வ டூம்ஸ்டே மீன்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா

கரை ஒதுங்கிய அபூர்வ டூம்ஸ்டே மீன்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் ‘டூம்ஸ்டே மீன்’ என்று அழைக்கப்படும் இரண்டு ராட்சத ஓர்பிஷ் மீன்கள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்கடலில் 3000 அடி ஆழத்தில் வாழும் இந்த 30 அடி நீள மீன்கள் கரைக்கு வருவது இயற்கை பேரழிவு அல்லது உலகப் போருக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. கடற்கரையில் தத்தளித்த இந்த மீன்களைக் கண்ட சுற்றுலாப் பயணிகள், அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், இந்த மீன்களின் வருகை மூன்றாவது உலகப் போரின் தொடக்கமா என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு முன்னதாகவே இவை தென்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இருப்பினும், இந்த நிகழ்விற்கும் பேரழிவுகளுக்கும் இடையே முறையான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *