ஈரானின் புதிய போர் வியூகம் குறித்த அதிரடி அறிவிப்பு

ஈரானின் புதிய போர் வியூகம் குறித்த அதிரடி அறிவிப்பு

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலில் ஈரான் தனது ராணுவ உத்திகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறி வரும் நிலையில் அதனை டெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களின் ஏவுகணை பலம் குறையவில்லை என்றும் எதிர்காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

ஏவுகணைகள் ஏவப்படும் எண்ணிக்கை குறைந்திருப்பதை ஒரு போர் தந்திரமாகவே ஈரான் பார்க்கிறது. ஏவுகணை ஏவுதளங்கள் சேதமடைந்துள்ளதாக எதிர்த்தரப்பு கூறினாலும் தங்களின் தாக்குதல் திறன் குறையவில்லை என ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் அதிக வெடிபொருட்களை சுமந்து சென்று எதிரிகளை நிலைகுலையச் செய்யும் அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *