மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மூன்று நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்
March 11, 2026

மதுரையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. போதிய விநியோகம் இல்லாததால் சமையல் எரிவாயு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதனால் இட்லி, தோசை போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலை இருமடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியால் ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள சுமார் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. சாலையோர உணவகங்கள் மற்றும் டீ கடைகளும் சிலிண்டர் கிடைக்காமல் திணறி வருகின்றன. நிலைமை மோசமாவதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.