ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இரண்டு விமானிகள் வீரமரணம்
March 11, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த சோகமான சம்பவத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய இரண்டு அனுபவம் வாய்ந்த விமானிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றியுள்ள அமைச்சகம், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிவித்துள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த தற்பொழுது உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.