இனி வாட்ஸ்அப்பிலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறலாம் தமிழக அரசின் அதிரடி வசதி

இனி வாட்ஸ்அப்பிலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறலாம் தமிழக அரசின் அதிரடி வசதி

தமிழக அரசு பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்அப் மூலமாகவே பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நம்ம அரசு’ என்ற வாட்ஸ்அப் சாட்போட் மூலம் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் மொபைல் வழியாகவே சான்றிதழ்களை உடனடியாகப் பெற முடியும்.

இச்சேவையைப் பெற 7845252525 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என்று செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் மொழி மற்றும் தேவையான சான்றிதழ் வகையைத் தேர்வு செய்து, பதிவு எண் அல்லது தேதி போன்ற விவரங்களை அளித்தால் சான்றிதழ் பிடிஎப் (PDF) வடிவில் உங்கள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும். வருவாய்த்துறை உள்ளிட்ட 16 துறைகளின் 51 சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *