போர் பதற்றத்திற்கு இடையே துபாயிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
March 10, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையினால் துபாயில் சிக்கியிருந்த முன்னணி நடிகர் அஜித்குமார் தற்போது பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார். அண்டை நாடுகளின் வான்பரப்பில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவரது பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது.
கார் ரேஸில் பங்கேற்க துபாய் சென்றிருந்த அஜித், திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் அங்கு தங்கியிருக்க நேரிட்டது. இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையே சென்னை திரும்பியதை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் விமான நிலையம் வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.