சிபிஐ சம்மனை உறுதி செய்த செந்தில் பாலாஜி விசாரணையில் பங்கேற்க டெல்லி செல்கிறார்

சிபிஐ சம்மனை உறுதி செய்த செந்தில் பாலாஜி விசாரணையில் பங்கேற்க டெல்லி செல்கிறார்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைப்படி ஏற்றுக்கொண்டார். இது குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், வரும் மார்ச் 17-ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சம்மனைப் பெற அவர் மறுத்ததாக வெளியான செய்திகள் முரணானவை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இதே வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ள விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *