விஜய்யின் அரசியல் எழுச்சி தமிழகத்தில் புதிய அதிசயத்தை நிகழ்த்துமா நாஞ்சில் சம்பத் அதிரடி

விஜய்யின் அரசியல் எழுச்சி தமிழகத்தில் புதிய அதிசயத்தை நிகழ்த்துமா நாஞ்சில் சம்பத் அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை அனுமதி மறுக்கப்படுவது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று அவர் குற்றம் சாட்டினார். நெருக்கடிகளைக் கண்டு விஜய் அஞ்சமாட்டார் என்றும், அண்ணா மற்றும் எம்ஜிஆர் வழியில் அவர் தமிழக ஆட்சியைப் பிடித்து புதிய வரலாறு படைப்பார் என்றும் சம்பத் நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாடு தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அக்கட்சி தனது செல்வாக்கை இழந்து வருவதாகக் கூறினார். 2026 தேர்தலில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசியலே வியக்கும் வகையில் விஜய்யின் வெற்றி அமையும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுகவின் முக்கால் நூற்றாண்டு கால அரசியலுக்கு தவெக முற்றுப்புள்ளி வைக்கும் என அவர் உறுதிபடக் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *