காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகளை குறைத்தது சென்னை ஆனந்தா ஹோட்டல்
March 10, 2026

மத்திய கிழக்கு போர் சூழலால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் தமிழக உணவகங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை ஆனந்தா ஹோட்டலில் போதிய சிலிண்டர் இல்லாததால் வெரைட்டி சாதங்கள், ஆப்பம் மற்றும் பல வகை குருமாக்கள் தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
திடீர் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகத்தை தாமதமாக திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மேற்பார்வையாளர் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார். நிலைமை சீராகும் வரை குறைந்த அளவிலான உணவுகளே வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இக்கட்டுப்பாடு கோயம்புத்தூர் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது.