டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசிய புதின் உலக அமைதிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்குமா

உலகின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை நள்ளிரவு தொலைபேசியில் உரையாடினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த முக்கிய பேச்சுவார்த்தையில், மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மற்றும் உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மோதல் பகுதிகளில் விரைவான போர்நிறுத்தம் மற்றும் தூதரக ரீதியிலான அமைதி தீர்வுகளே இந்த உரையாடலின் மையமாக அமைந்தன.
ராணுவ மோதல்களைக் குறைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று கிரெம்ளின் ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நிலவும் கொந்தளிப்பான சூழலில், உலகின் இரு பெரும் வல்லரசுத் தலைவர்களின் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போர் பதற்றத்தைத் தணித்து உலகிற்கு புதிய நம்பிக்கையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.