ஆந்திராவில் பைக் சாகசம் விபரீதமானதில் யூடியூபர் மற்றும் அவரது நண்பர் பரிதாப பலி
March 10, 2026

கடப்பா விமான நிலைய சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட யூடியூபர் முபாரக் மற்றும் அவரது நண்பர் சையத் ஆகியோர் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது பைக்கை ஓட்டிய சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முபாரக் பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்த இளைஞர்களின் இந்த முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.