டெல்லியில் மணிப்பூர் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பள்ளி மாணவன் உட்பட 4 சிறுவர்கள் சிக்கினர்

டெல்லியில் மணிப்பூர் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பள்ளி மாணவன் உட்பட 4 சிறுவர்கள் சிக்கினர்

தெற்கு டெல்லியின் சத்புலா பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மணிப்பூர் இளம்பெண், ஒரு கும்பலால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். அந்தப் பெண்ணை ஆபாசமாகத் திட்டிய சிறுவர்கள், அவர் தட்டிக்கேட்டதால் பெல்ட் மற்றும் இரும்பு ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 7-ஆம் வகுப்பு மாணவன் மற்றும் மூன்று பள்ளி இடைநின்ற சிறுவர்களைக் கைது செய்தனர். வடகிழக்கு மாநிலப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு பல்வேறு மாநிலத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, டெல்லியில் வெளிமாநிலத்தவர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *