பீகாரில் நிதிஷ் குமார் எடுத்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் எடப்பாடிக்கு புதிய நெருக்கடியா

பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவைக்கு செல்ல முடிவெடுத்திருப்பது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜகவின் வியூகத்தால் நிதிஷ் குமார் ஓரங்கட்டப்படுவதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், இந்த மாற்றம் பிராந்திய கட்சிகளின் செல்வாக்கை குறைக்கும் ஒரு தொடக்கப்புள்ளி என கருதுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் பீகார் பாணி அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.
இந்த சூழல் தற்போது தமிழக அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைப் போலவே தமிழகத்திலும் பாஜக தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் திட்டமிடுவதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் இத்தகைய நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் இபிஎஸ்-க்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.