தொடர்ந்து மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்கள் கண்களைப் பாதுகாக்க இதோ சில வழிகள்
March 10, 2026

தற்போதைய டிஜிட்டல் உலகில் கணினி மற்றும் மொபைல் திரைகளை அதிக நேரம் பார்ப்பதால் ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ பாதிப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து கண்களைப் பாதுகாக்க நிபுணர்கள் ’20-20-20′ விதியைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 விநாடிகள் பார்க்க வேண்டும்.
தொடர் வேலைகளுக்கு இடையே கண்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன் திரையில் ‘ப்ளூ லைட் ஃபில்டர்’ பயன்படுத்துவது அவசியம். போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் வைட்டமின்-ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்வதுடன் பாதிப்பு நீடித்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.