இரத்த சோகையின் ஆபத்திலிருந்து தப்பிக்க ஹீமோகுளோபின் குறைபாட்டின் முக்கிய அறிகுறிகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள்
March 9, 2026

உடலின் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் ஹீமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாட்டால் இரத்தத்தில் இதன் அளவு குறையும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. கல்லீரல் பாதிப்பு அல்லது தாலசீமியா போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதிகப்படியான சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் தோல் வெளிறிப்போதல் போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். இதைத் தவிர்க்க கீரை, மாதுளை மற்றும் பீட்ரூட் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சரியான உணவுமுறை மற்றும் ஆரம்பகால விழிப்புணர்வு மட்டுமே எதிர்கால ஆரோக்கிய சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.