அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை அல்லது நிதியுதவி வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
March 9, 2026

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்து உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான கொள்கைகளை உருவாக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நலக் குறைபாடுகள் காரணமாக வேலை வழங்க முடியாத பட்சத்தில், அரசு வேலைக்கு இணையான மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பக்சி அமர்வு தெரிவித்தது.
குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஷாஹீன் மாலிக் தொடர்ந்த வழக்கில், அமில விற்பனையைத் தடுக்கவும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.