இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக உருவெடுக்கும் பாகிஸ்தானின் அசுர வேக ஆயுத குவிப்பு குறித்த அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக உருவெடுக்கும் பாகிஸ்தானின் அசுர வேக ஆயுத குவிப்பு குறித்த அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தான் தனது ராணுவத் தேவைகளுக்காகச் சீனாவை முழுமையாகச் சார்ந்துள்ளதை சிப்ரி அமைப்பின் புதிய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த மொத்த ஆயுதங்களில் 80 சதவீதம் சீனாவிலிருந்து பெறப்பட்டவை. இதன் மூலம் உலகளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவுடனான எல்லைப் பதற்றமே பாகிஸ்தான் இவ்வளவு பெரிய அளவில் ஆயுதங்களைச் சேமிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் எனப் பல நவீன ரகத் தளவாடங்களைச் சீனா வழங்கி வருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் இந்த அதீத தலையீடு பாதுகாப்பு ரீதியாகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *