புதுச்சேரி பெண்களின் வங்கி கணக்கில் ரூ 5000 வரவு வைக்கப்பட்டது

புதுச்சேரி பெண்களின் வங்கி கணக்கில் ரூ 5000 வரவு வைக்கப்பட்டது

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள 63 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் தலா 5,000 ரூபாய் நிதியுதவி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை சேர்த்து வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசு தரப்பில் 31.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அண்டை மாநிலமான தமிழகத்தை பின்பற்றி இந்த அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித அரசு நிதியுதவியும் பெறாத பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *