சாட்ஜிபிடி மூலம் தற்கொலைக்கு வழி தேடிய மாணவிகள் எலான் மஸ்க் கடும் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் சூரத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் சாட்ஜிபிடி தளத்தில் தற்கொலைக்கான வழிமுறைகளைத் தேடி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது செல்போன்களை ஆய்வு செய்தபோது, ஆபத்தான மருந்துகள் மற்றும் தற்கொலை செய்யும் முறைகள் குறித்து செயற்கை நுண்ணறிவுத் தளத்திடம் அவர்கள் தொடர்ந்து உரையாடியது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் செய்தி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க் தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏஐ தளங்கள் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததால், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இத்தகைய தளங்களைப் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு விதிகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.