ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் சொத்து மதிப்பு எவ்வளவு லண்டன் அரண்மனை முதல் சுவிஸ் வங்கி வரை
March 10, 2026

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ளார். ராணுவம் மற்றும் அணு ஆயுதங்கள் மீதான முழு அதிகாரம் இனி 56 வயதான இவரிடமே இருக்கும்.
மொஜ்தபா கமேனியின் சொத்து மதிப்பு ரூ.25,000 கோடிக்கும் அதிகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் ரூ.1,100 கோடி மதிப்பிலான சொகுசு வீடுகள், சுவிஸ் வங்கி முதலீடுகள் மற்றும் கப்பல் போக்குவரத்து எனப் பல பினாமி சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.