மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் எரிபொருள் இருப்பு குறித்து நிம்மதியளிக்கும் செய்தி

மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் எரிபொருள் இருப்பு குறித்து நிம்மதியளிக்கும் செய்தி

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்தியா தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி நாட்டில் சுமார் 4000 கோடி லிட்டர் எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் மங்களூரு போன்ற நிலத்தடி சேமிப்பு தளங்களில் உள்ள இந்த இருப்பு நாட்டின் ஏழு முதல் எட்டு வார கால தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும்.

எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா தற்போது 40 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனால் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மீதான தங்கியிருப்பு குறைந்துள்ளதுடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இறக்குமதி செய்யப்படும் அளவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுத்திகரிப்பு திறன் தேவையை விட அதிகமாக இருப்பதால் உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *