பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
March 9, 2026

ஜான்-இ-மன் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். 2022-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க இயக்குநர் தரப்பில் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் தற்போது இயக்குநர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து ஏன் இந்தப் புகார் அளிக்கப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தற்போது பாலன் தி பாய் திரைப்படத்தை இயக்கி வரும் சிதம்பரத்திற்கு இந்தத் தீர்ப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.