மசூதி சுவரில் சிறுவனை வைத்து முழக்கமிட்ட தந்தை அதிரடி கைது
March 9, 2026

கர்நாடகாவின் பாகல்கோட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதாக ஆட்டோ ஓட்டுநர் யமுனோரி பஜந்த்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். தனது 12 வயது மகனை மசூதி சுவரில் மத முழக்கங்களை எழுத தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவன் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றச் செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என எஸ்பி சித்தார்த் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மசூதி கமிட்டியினரின் பொறுமையைப் பாராட்டிய போலீசார், அப்பகுதியில் அமைதி நிலவுவதாகவும் சட்டப்பூர்வ விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.