உலகக்கோப்பை வெற்றியை நம்ப முடியாமல் மேடையில் அறைந்து கொண்ட சூர்யகுமார் யாதவ்
March 9, 2026

அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடியால் 255 ரன்கள் குவித்த இந்தியா, பின்னர் எதிரணியை 159 ரன்களுக்கு சுருட்டியது. தோனி மற்றும் ரோகித் சர்மாவின் சாதனையை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் படை சமன் செய்துள்ளது.
வெற்றி கோப்பையை வாங்கச் செல்லும் போது, இது கனவா நனவா என்ற திகைப்பில் சூர்யகுமார் தன் கன்னத்தில் அறைந்து கொண்டார். இந்த வரலாற்று வெற்றியை நம்புவதற்கு தமக்கு சிறிது காலம் தேவைப்படும் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரோகித் மற்றும் ஜெய் ஷா வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய சூர்யா, இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு என புகழாரம் சூட்டினார்.