மறைக்கப்பட்ட ரகசிய சாம்ராஜ்யம் மோஜ்தபா கமேனியின் கோடிக்கணக்கான சொத்து விவரம் அம்பலம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது பிரம்மாண்ட சொத்து மதிப்பு உலகையே வியக்க வைத்துள்ளது. லண்டனில் உள்ள சொகுசு பங்களாக்கள், துபாயில் உள்ள வில்லாக்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள ஹோட்டல் தொழில்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான சர்வதேச சாம்ராஜ்யத்தை அவர் ரகசியமாக நடத்தி வருகிறார். சுவிஸ் வங்கி கணக்குகள் மற்றும் பாரசீக வளைகுடா கப்பல் போக்குவரத்து மூலம் அவருக்கு பெருமளவு வருமானம் கிடைப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
புதிய தலைவராக மோஜ்தபா பதவியேற்றவுடன் இஸ்ரேல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் ஈரானுக்குள் மக்கள் போராட்டமும் வெடித்துள்ளது. 56 வயதான இவர் ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி உடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அதிகாரத்தை தக்கவைத்துள்ளார். அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் செயல்படும் இவரது ரகசிய நிதி பரிவர்த்தனைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு இடையே இந்த பரம்பரை அதிகாரமும் பொருளாதார பலமும் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.