வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு முதல் மலையிலேயே பக்தர் பரிதாப மரணம்
March 9, 2026

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்காக வந்த கெம்பட்டியைச் சேர்ந்த 48 வயதான ஹரிதாஸ் என்ற பக்தர், முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கரடுமுரடான மலைப்பாதை வழியாக அவரது உடலை கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த மற்ற பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டில் பிப்ரவரி 1 முதல் மலையேற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதுவரை மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மிகவும் செங்குத்தான மற்றும் கடினமான பாதைகளைக் கொண்ட இந்த மலையேற்றத்திற்குச் செல்லும் முன், பக்தர்கள் முறையான உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் குழுவாகச் செல்ல வேண்டும் என்றும் வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.