கூகுளில் தேடி வலியற்ற மரணம் குஜராத் மாணவிகள் எடுத்த விபரீத முடிவு

கூகுளில் தேடி வலியற்ற மரணம் குஜராத் மாணவிகள் எடுத்த விபரீத முடிவு

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கல்லூரி மாணவிகள் இருவர் கோயில் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குச் சென்ற 18 மற்றும் 20 வயதுடைய தோழிகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடியபோது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஊசிகள் மற்றும் விஷ பாட்டில்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக கூகுள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வலியின்றி தற்கொலை செய்வது எப்படி என்று தேடியது அம்பலமானது. இணையத் தகவல்களின் அடிப்படையில் விஷ மருந்துகளை வாங்கி அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஏதும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *