அடுத்த 48 மணிநேரத்தில் ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

அடுத்த 48 மணிநேரத்தில் ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டியது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் ஏழு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவல் வாஷிங்டன் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி மையங்களை அழிக்க மார்ச் 10 அல்லது 11 தேதிகளில் அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு இந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் ஒரு அணுஆயுதப் போர் மூளும் அபாயத்தால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *