உஷார்! உங்கள் அந்தரங்க காட்சிகளை கண்காணிக்கிறதா மெட்டாவின் ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ்?
March 9, 2026

மெட்டா நிறுவனத்தின் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயனர்களின் அந்தரங்க பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த கண்ணாடிகள் மூலம் பதிவாகும் படுக்கையறை மற்றும் குளியலறை காட்சிகள், ஏஐ தொழில்நுட்பத்தை பயிற்றுவிப்பதற்காக கென்யாவில் உள்ள ‘சாமா’ நிறுவன ஊழியர்களால் ஆய்வு செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயனர்கள் தங்களை அறியாமலேயே ஆடை மாற்றுவது மற்றும் வங்கி விவரங்களை கையாளுவது போன்ற காட்சிகள் இந்த ஒப்பந்த ஊழியர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. மெட்டா நிறுவனம் இதை தொழில்நுட்ப மேம்பாடு என்று கூறினாலும், தனிப்பட்ட இடங்களில் இந்த கண்ணாடிகளை பயன்படுத்துவது மிகப்பெரிய தனியுரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கேஜெட்களை பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.