ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் கத்தாரில் சிக்கியது இந்திய கூடைப்பந்து அணி போட்டி ரத்து
March 1, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்திய தேசிய ஆண்கள் கூடைப்பந்து அணி கத்தாரில் தவிக்கிறது. 2027 பிபா உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற வீரர்கள், அடுத்ததாக லெபனான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, இந்திய அணி தோஹாவிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு வெற்றிகூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.