திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்ட பின் ஜாதகம் சரியில்லை என கூறுவது இனி தண்டனைக்குரிய குற்றம்

திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்ட பின் ஜாதகம் சரியில்லை என கூறுவது இனி தண்டனைக்குரிய குற்றம்

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு, பின்னர் ‘ஜாதகம் பொருந்தவில்லை’ என்ற காரணத்தைக் கூறி திருமணத்தை மறுப்பது குற்றமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. உடலுறவு கொள்வதற்கு முன்னரே ஏன் ஜாதகத்தைப் பார்க்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா கூறுகையில், ஏமாற்றுத்தனமான வாக்குறுதி மூலம் பெறப்படும் சம்மதம் சட்டப்படி செல்லாது என்றார். பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 69-ன் கீழ் இது தண்டனைக்குரியது. வாட்ஸ்அப் உரையாடல்களை ஆதாரமாகக் கொண்டு, பெண்ணை ஏமாற்றிய நபரின் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *