மதத்திற்காக தாயை நிராகரித்த மகன் 22 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெஞ்சையள்ளும் துயரம்
February 24, 2026

கொல்கத்தா காப்பகத்தில் இருந்த 62 வயது சுஷிலா முர்முவை ஹேம் ரேடியோ குழுவினர் பீகாரில் உள்ள அவரது மகனுடன் இணைத்தனர். ஆனால் 22 வருடங்களுக்குப் பிறகு தாயைக் கண்ட மகன், மதக் காரணங்களைக் கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார்.
தாய் கிறிஸ்துவ மதத்தைக் கைவிட்டு இந்து மதத்திற்கு மாறினால் மட்டுமே ஏற்பேன் என மகன் பிடிவாதம் காட்டுகிறார். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக ஹேம் ரேடியோ அமைப்பினர் தற்போது காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளனர்.