சசிகலா புதிய கட்சி தொடங்குகிறாரா? தேர்தல் களத்தில் அதிரடி கிளப்பும் திவாகரனின் அதிரடி பேட்டி

சசிகலா புதிய கட்சி தொடங்குகிறாரா? தேர்தல் களத்தில் அதிரடி கிளப்பும் திவாகரனின் அதிரடி பேட்டி

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக சசிகலாவின் வசமாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சசிகலா விரைவில் புதிய கட்சியைத் தொடங்கி தேர்தலைச் சந்திக்க உள்ளதாக திவாகரன் உறுதிப்படுத்தியுள்ளார். வேட்பாளர்களைக் களமிறக்கி பலப்பரீட்சை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *