அழிவின் விளிம்பிலிருந்து மீண்டு வரும் நியூசிலாந்தின் அபூர்வ காகாபோ கிளிகள்
February 24, 2026

நியூசிலாந்தில் அழிந்து வரும் நிலையில் இருந்த காகாபோ கிளிகளின் எண்ணிக்கை தீவிர பாதுகாப்பு முயற்சிகளால் தற்போது 200-ஐ தாண்டியுள்ளது. காடுகளில் பழங்கள் அதிக அளவில் விளைந்ததால் இந்த ஆண்டு இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. பறக்க முடியாத இந்த வகை கிளிகள் அழியாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
ஒவ்வொரு கிளியும் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வேட்டை விலங்குகளிடமிருந்து இவற்றை காக்க விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்படுகின்றனர். தற்போது செயற்கை முறையில் முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சுகளின் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.