திருமண உறுதி அளித்துவிட்டு ஜாதகம் பொருந்தவில்லை என மறுப்பது குற்றமாகும்

திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்ட பிறகு, ஜாதகம் பொருந்தவில்லை எனக் கூறி திருமணத்தை மறுப்பது கடுமையான குற்றம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 69-ன் கீழ் இது ஏமாற்று வேலை என்று குறிப்பிட்டது. தொடர்ந்து திருமண வாக்குறுதி அளித்துவிட்டு பின்வாங்குவது சட்டப்படி தண்டனைக்குரியது.
அனைத்து முறிந்த உறவுகளும் குற்றவியல் வழக்குகள் அல்ல என்றாலும், இந்த விவகாரத்தில் திட்டமிட்டு வாக்குறுதி மீறப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறினார். 2025 முதல் நீடிக்கும் இந்த புகாரில், திருமண உறுதி அளிக்கப்பட்டதால் முதலில் புகார் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், மீண்டும் அதே காரணத்தைக் கூறி ஏமாற்றியதால், தற்போது ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.