மீரட்டில் ரமலான் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

மீரட்டில் ரமலான் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாரி கேட் பகுதியில் திங்கள்கிழமை இரவு மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஆறு மாத இரட்டை பெண் குழந்தைகளும் அடங்குவர். வீட்டின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த துணி மூட்டைகளில் மின் கசிவு காரணமாக தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெருக்கமான சந்துகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஏணி மூலம் 6 பேரை மீட்ட போதிலும், மாடியில் சிக்கிய 5 குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *