தமது உயிருக்கு ஆபத்து என அஞ்சும் ஈரானின் உயர்மட்டத் தலைவர் காமேனி எடுத்த அதிரடி முடிவு

தமது உயிருக்கு ஆபத்து என அஞ்சும் ஈரானின் உயர்மட்டத் தலைவர் காமேனி எடுத்த அதிரடி முடிவு

ஈரானின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி, தமக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, நெருக்கடி காலங்களில் நாட்டை வழிநடத்த அவர் தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான அலி லாரிஜானி மற்றும் நெருக்கமான ராணுவ, அரசியல் முக்கியஸ்தர்களிடம் முக்கிய பொறுப்புகளை ரகசியமாக ஒப்படைத்துள்ளார்.

சமீபத்திய மக்கள் போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முக்கிய முடிவை காமேனி எடுத்துள்ளார். நாட்டின் நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் ஈரானின் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *