டொனால்ட் ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் நெருக்கடி
February 23, 2026

அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக் கொள்கையில் தெளிவற்ற சூழல் நிலவுவதால் வர்த்தக ஒப்பந்த ஒப்புதல் நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்திடம் கூடுதல் விளக்கங்களைக் கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
ப்ளூம்பெர்க் செய்திகளின்படி, அமெரிக்காவின் வரி கொள்கைகள் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை முன்னெடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தத் தகவல்களைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.