அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
February 23, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரி உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர்த்தக அமைச்சகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டிரம்ப் தேசிய பொருளாதார அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிகளை விதித்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் வர்த்தக உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.